நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொழும்பிலும் கண்டியிலும் நாளைய …
Read More »கொழும்பில் மட்டும் 11 மே தினக் கூட்டங்கள்!
நாளை நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் மொத்தமாக 17 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இவற்றுள் அதிகப்படியாக 11 கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளன எனவும் தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அந்தக் கட்சியில் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் பேரணி பிற்பகல் 2 மணியளவில் மாளிகாவத்தையில் …
Read More »ஐ.ம.சு. கூட்டமைப்பை விஸ்தரிக்கத் திட்டம்! – புதிய அரசியல் கட்சிகளை உள்வாங்கவும் ஏற்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். …
Read More »வாவியில் நீராடிய சிறுமி முதலையின் பிடிக்குள் சிக்கிப் பலி!
தாய், சித்தப்பா மற்றும் சித்தியுடன் வாவியில் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமி முதலையால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிந்துள்ள பரிதாப சம்பவம கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூலங்கமுவ வாவியிலிருந்து வரும் ஓடையொன்றில் நேற்றுமுன்தினம் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நேவ, லோலுகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஹிமிஹாமினி அனுஷிகா எனும் 13 வயதுச் சிறுமியே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். பொலிஸாரும் கடற்படையினரும் …
Read More »இலங்கைக்குள் மீண்டும் இந்தியப்படை நுழையும்! – இப்படிக் கூறுகின்றார் சரத் வீரசேகர
முஸ்லிம் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் இந்திய இராணுவம் மீண்டும் இலங்கைக்குள் நுழையும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எரிபொருள் பாவனையில் இந்தியா உலகின் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்த எரிபொருளை அடிப்படையாக வைத்தே அந்த நாடு இலங்கைக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு முற்படுகின்றது. திருகோணமலையில் இருக்கின்ற 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை இந்தியாவுக்குக் கொடுத்துவிட்டது. …
Read More »இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி! – மட்டக்களப்பில் மைத்திரி விசனம்
“இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். ஆனால், இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே …
Read More »வென்றது ஹர்த்தால் போராட்டம்! – கிடைக்குமா உறவுகளுக்கு நீதி?
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்றுப் பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. இதனால் தாயக தேசம் முழுவதும் நேற்று முற்றாக முடங்கியது. மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழர் தாயக தேசம் ஓரணியில் ஒருமித்து நேற்று முடங்கியது. நேற்றைய போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தமது முழுமையான தார்மீக பேராதரவை வழங்கியிருந்தன. ஹர்த்தால் போராட்டம் …
Read More »வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!
வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள் அரசியல் கட்சிகள் * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி * தமிழர் விடுதலைக் கூட்டணி * ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் * அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் * புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அமைப்புக்கள் * வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் * மட்டக்களப்பு சிவில் சமூகம் * அம்பாறை முஸ்லிம்கள் …
Read More »பூரண ஹார்த்தாலால் இன்று முடங்கியது தமிழர் தாயகம்!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கிலும், கிழக்கிலும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் …
Read More »தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டிதான் சரியான தீர்வு! – அவரின் நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித எடுத்துரைப்பு
தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நேற்று மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த …
Read More »