Monday , June 17 2024
Home / பார்த்தீபன் (page 20)

பார்த்தீபன்

காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!

காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து 

“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது?  அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.” – இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். “காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் …

Read More »

வித்தியா படுகொலை வழக்கு: சி.ஐ.டியின் விசாரணைக்கு சமுகமளிக்காத விஜயகலா!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டபோதும், அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது. பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், வடக்கு மாகாணத்தின் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் …

Read More »

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை தவிர்த்த சித்தார்த்தன் எம்.பி.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுமார் 45 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான நியமன ஆசன விவகாரத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் …

Read More »

ரணிலும் ரவியும் உடன் பதவி விலகவேண்டும்! – நாமல் வலியுறுத்து 

“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான …

Read More »

மாகாண சபைத் தேர்தல்களின் ஒத்திவைப்புக்கு எதிராக மஹிந்த அணி நீதிமன்றம் செல்ல தீர்மானம்!

மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக பொது எதிரணியான மஹிந்த அணி நீதிமன்றம் செல்லவிருப்பதாக தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூல அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளது. பொது எதிரணியின் சார்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வருடத்தின் செப்டெம்பர் /ஒக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் …

Read More »

25 பக்கங்களாக குறைந்த இடைக்கால அறிக்கை! – அதுவே நாடாளுமன்றுக்கு வரும்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை 35 பக்கத்திலிருந்து 25 பக்கமாகக் குறைத்து இறுதி செய்துள்ளது. 25 பக்கமாகக் குறைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே அரசியல் நிர்ணய சபையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 3 தினங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அதனைக் குறைக்கவேண்டும் என்ற யோசனை இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. …

Read More »

அமைச்சர் பதவியை உடன் துறக்கவேண்டும் ரவி! – பத்தரமுல்ல மகாநாயக்கர் வலியுறுத்து 

உலகின் தலைசிறந்த நிதி அமைச்சர் என்ற விருதைப்பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பிணைமுறி மோசடி நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் எனவும், அதனால் அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் எனவும் ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்கவின் லீலைகள் இந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகியுள்ளன. …

Read More »

வட மாகாண சுழற்சிமுறை ஆசனம்: புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு; ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை! – தடுத்து நிறுத்துமாறு சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நிகழ்த்தினார். வடக்கு …

Read More »

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது நீதிபதியின் உயிரைப் பாதுகாத்து தன்னுயிரைத் துறந்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவுக்கு நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழத்தில் அனைத்துப்பீட மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More »