Sunday , April 14 2024
Home / பார்த்தீபன் (page 10)

பார்த்தீபன்

புத்தளத்தில் சிறுவன் படுகொலை!

புத்தளம்,  முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து சிறுவனொருவன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த நஸார் முஹம்மது நஸ்ரான்  (வயது  14) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- உயிரிழந்த சிறுவன்  தனது நண்பரான இளைஞர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமீரகம பிரதேசத்திலுள்ள தோட்டத்துக்குச் சென்றுள்ளார். குறித்த இருவரும் …

Read More »

ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்தவேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு

“ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.” – இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. “நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்கவேண்டும். அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்படவேண்டும்” எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் …

Read More »

அரசு மீது புதிய தாக்குதல்தொடுக்கத் தயாராகின்றனர் மஹிந்த அணியினர்! – பஸில் தலைமையில் களப்பணி தீவிரம்

அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார். எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு …

Read More »

அரசுக்குள் கறுப்பு ஆடுகள்! மைத்திரியிடம் அறிக்கை!! – பொது எதிரணியிலிருந்தும் குத்துக்கரணம்

தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில்  தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் …

Read More »

ஜனாதிபதி  – கூட்டமைப்பு இன்று முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார். புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு மேற்படி சந்திப்பில்  ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கூட்டமைப்பு …

Read More »

பதவி துறக்கின்றார் விஜயதாஸ! நீதி அமைச்சராகிறார் ஜயம்பதி!!

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவுள்ள நிலையில், புதிய நீதி அமைச்சராக எவரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை நடத்திவருகின்றனர் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. புதிய நீதி அமைச்சர் பதவிக்கு முக்கிய இரண்டு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவின் பெயர் சிபாரிசு பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. …

Read More »

மூவரடங்கிய குழுவின் இறுதி முடிவு இன்று! – கூடுகிறது ஐ.தே.கவின் நாடாளுமன்றக்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில்,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் …

Read More »

தாய்வீட்டுக்குள் நுழையத் தயாராகின்றார் திஸ்ஸ!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது …

Read More »

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்கு 50 ஆயிரம் கல்வீடுகள்: கூட்டமைப்பு வரவேற்பு! 

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில், “பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சாரப்படுத்தி அந்தப் பொருத்து வீடுகளை எமது மக்களின் தலையில் கட்டி இலாபம் …

Read More »

கிழக்கு மாகாணத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பு, மு.கா. தயார்! – ஹக்கீம் அறிவிப்பு

  “மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புப் பற்றிப் பேப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸும் தயாராகவே உள்ளன.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் …

Read More »