ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!

ராஜித சேனாரத்ன

ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார் எனவும் சுதத்த தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அளுத்கம அசம்பாவிதத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் ராஜித சோனாரத்ன தனது கருத்துகளைக் கூறி வருகிறார் எனவும், அவரது இந்தக் கருத்தை வாக்குமூலமாகப் பதிவுசெய்யுமாறு தாங்கள் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ள சுதத்த தேரர், அமைச்சரவைப் பேச்சாளர் என்ற மிகப் பொறுப்பான பதவியில் இருக்கும் ராஜித சேனாரத்ன உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

About பார்த்தீபன்

View all posts by பார்த்தீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *