Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சப்பாணி குழந்தை கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும்: கமலை வம்பிழுத்த அமைச்சர்

சப்பாணி குழந்தை கட்சியை கருவிலேயே அழிக்க வேண்டும்: கமலை வம்பிழுத்த அமைச்சர்

நாகர்கோவிலில் செய்தியாலர்கள் சந்திப்பில் பேசிய போது அவர் பின்வருமாறு பேசினார், கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும்.

கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்ஜிஆர் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார்.

தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அதிமுகவும், திமுகவும்தான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என பேசியுள்ளார்.

கமலை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசியுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv