காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம்.

ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன.

காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு. ஆனால் உண்மையில் உக்ர வடிவில் உள்ள காளியின் படத்தைதான் வீட்டில் வைக்கக்கூடாது. சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை வைத்து வணங்குவதில் தவறில்லை. காளியை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும்.

காளி காயத்ரி மந்திரம்:

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை திங்கட்கிழமையிலோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ சொல்ல துவங்குவது நல்லது. அமாவாசை அன்று சொல்ல துவங்கினால் மேலும் சிறப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *