Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்று கூடுகின்றது.

கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி கூடிய உயர்பீடக் கூட்டத்தில், பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து ஆராயப்பட்டு, இறுதி முடிவு எட்டப்பட்டது.

இதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கவிருப்பதாக உறுதியளிக்கப்பட்டிந்தது.

எனினும் இன்றுவரையிலும் அவருக்கு, அப்பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தொடர்பாக கட்சியின் உயர்பீடம் இன்றைய தினம் கடினமான தீர்மானமொன்றை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் தலைமைத்துவம் பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்தார்.

கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் பற்றிய இருவட்டுக்கள் தன்னிடம் இருப்பதாகவம், அவற்றை மதத் தலைவர்களிடம் வழங்கி உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கையையும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று கூடவுள்ளதோடு காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …