வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரச சட்டத்தரணியான நாகரட்ணம் நிஷாந்த, குறித்த பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து, நீதவான் நீதிமன்றம் விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தார்.
இதன்படி ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவனையிடுமாறும் மேல் நீதிமன்றில் விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜொய் மகாதேவா, குறித்த சந்தேகநபர் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புபடவில்லை எனக் குறிப்பிட்டு, அவருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது, விரைவில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டு, பத்தாவது சந்தேக நபரது பிணை மனுவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
அத்துன், குறித்த பத்தாவது நபரை நிராகரித்ததுடன், அவரை ஒரு வருடகாலம் நீதிவான் நீதிமன்றில் வைத்து விசாரிக்க அனுமதியளித்ததார்.
இதில் ஒரு மாத கால தவணை ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில், குறித்த நபரை மீண்டும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.உத்தரவிட்டிருந்தார்.