வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை

வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வங்காளதேசம் நாட்டில் ராங்பூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த குனியோ ஹோஷி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ஜே.எம்.பி (ஜமாதுல் முஜாஹிதீன் பங்ளாதேஷ்) என்ற அமைப்பைச் சார்ந்த 8 பேர் தேடப்பட்டு வந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இருவர் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். ஒருவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.

ஹோஷியின் கொலை வழக்கு விசாரணை ராங்பூர் நீதிமன்றத்தில் தொடந்து நடந்து வந்த நிலையில், இறுதித் தீர்ப்பை நீதிபதி இன்று அறிவித்தார். இத்தீர்ப்பில், கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.எம்.பி அமைப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டு அரசால் கடந்த மூன்றாண்டுகளாக தடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites