அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார்.

போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர் இறப்பிற்கான காரணம் அதுவாக இருக்காது. பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அழகு மற்றும் அறிவு நிறைந்த இந்த மாணவியின் உயிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *