“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் யாவரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது உறவினர்கள் வடக்கு, கிழக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.





