புதிய அரசமைப்புக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் : சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் எடுத்துரைத்தாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஐந்துநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலக்கிருஷணன் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,

மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மக்களின் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சந்திப்பில் விரிவாக கலந்துரையாடினோம்.

இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். நியாயமான அரசியல் தீர்வு வரும்போதுதான் சமத்துவத்துடன் வாழ முடியும்.

புதிய அரசமைப்பை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் காட்ச்சியும் ஸ்ரீலாங்க சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும். எங்களுடைய கருத்துகளை அவர் ஏற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கில் சிங்கப்பூர் அரசால் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *