ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நீதியமைச்சரின் கூற்றை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும், அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை முடிவுக்கு கொண்டு வரும் வரை தான் ஓயப் போவதில்லை என கூறவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டத்தின் முடிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீதியமைச்சரும் தனியாக கலந்துரையாடுவதற்காக வேறு ஒரு இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *