Tag: கச்சதீவு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு!

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலிப் பூஜையின் பின்னர் திருச்சொரூபப் பவனியுடன் திருவிழா நிறைவுபெற்றது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குப்பணிமனை மேற்கொண்டிருந்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகளும் இத்திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா! வரலாற்று […]

ஏழு இந்திய மீனவர்கள் கைது!

கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ். கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளனர். மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.