வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது! சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. …
Read More »அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. …
Read More »அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் இல்லை
ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் களமிறக்கவில்லை எனவும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பில் மட்டுமே இலங்கை உள்ளதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நெருக்கடி நிலைமைகளை அடுத்து இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை எனவும், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப்படைகள் …
Read More »சிக்கிய தீவிரவாதியின் தற்போதைய நிலை என்ன?
குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. கண்டி – அலவத்துகொட, …
Read More »டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு
கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 …
Read More »அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். …
Read More »ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது. இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read More »இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்
அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு …
Read More »ஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த
புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசியலமைப்பு திருத்தம் நாட்டைப் பிரிக்கும் முயற்சியாகும். ஒரு சிலர் இதனைத் திருத்தம் என்கிறனர். ஒருசிலர் சட்டமூல வரைவு என்கிறனர். ஒரு சிலர் அப்படி …
Read More »மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, …
Read More »