Wednesday , December 11 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்

ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv