Monday , April 15 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் இல்லை

அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் இல்லை

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லை எனவும் இலங்­கையின் பாது­காப்­பு ­ப­டை­களின் பாது­காப்பில் மட்­டுமே இலங்கை உள்­ளதாகவும் இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்­கடி நிலை­மை­களை அடுத்து இலங்­கைக்குள் அமெ­ரிக்க இரா­ணுவம் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­வ­ரு­கின்ற நிலையில் அதன் உண்­மைத்­தன்மை குறித்து வின­விய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்­கைக்குள் எந்­த­வித சர்­வ­தேச இரா­ணுவ படை­களும் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை எனவும், குறிப்­பாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் இரா­ணு­வப்­ப­டைகள் இலங்­கைக்குள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக தொடர்ச்­சி­யாக கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்­றதன.

ஆனால் எமது பாது­காப்பு படை­யினர் மாலி தீவு­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் எமது இரா­ணுவ வாக­னங்கள் சில பரி­சோ­திக்­க­பட்டு வரு­கின்றதாகவும், குறித்த வாக­னங்கள் அனைத்­துமே எமக்கு ஐக்­கிய நாடுகள் அமை­திப்­படை மூல­மாக வழங்­கப்­பட்ட வாக­னங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்­றை பரி­சோ­தனை செய்து தயார்­ப­டுத்தி வரு­கின்றோம். அந்த புகைப்­ப­டங்­களை வைத்­துக்­கொண்டே சில வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது.

எனினும் அமெ­ரிக்க இரா­ணுவ படை­களை இலங்­கைக்குள் கொண்­டு­வ­ர­வில்லை. அவர்கள் வரு­வ­தாக கோரவும் இல்லை. இலங்­கையில் தற்­போது நிலவும் பதற்­ற­மான நிலை­மை­களை கையாள எமது முப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸ் மட்­டுமே ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்­களின் இயல்பு வாழ்­கையை குழப்­பவே சிலர் பொய்­யான தக­வல்­களை பரப்­பு­வதன் மூல­மாக முயற்­சித்து வரு­கின்­றனர்.

அதோடு நாட்டில் மேலும் தொடர்ச்­சி­யாக தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் சகல பகுதிகளிளும் முப்படையினர் குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv