உத்தேச அரசமைப்புத் திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டால் தாங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் எனவும், அத்தகைய காலகட்டத்தில் இவ்விடயத்தில் தாங்கள் பொது எதிரணியான மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசாரார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் கடந்த அரசமைப்புக் குழுக் கூட்டத்தின்போது சிங்களத்தில் ‘ஏகிய’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தையை ஆங்கிலத்தில் […]
Tag: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அமைச்சரவை இணைப்பேச்சாளராக சு.கவின் சார்பில் தயாசிறி நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்கவுள்ளார். அவரின் பங்குபற்றலை அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளராக இருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க அந்தப் பதவியில் தொடர்ந்தும் […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சுசில் […]
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள்
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள் ஆளுந்தரப்பினரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்திற்கு ஏறச்செய்த சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில மூத்த உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையிலேயே சிவில் அமைப்புக்கள் இதனை வலியுறுத்தியுள்ளன. […]
விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி
விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகளைத் தோற்றுவித்து குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வாறானவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மேல் மாகாண முதலமைச்சருமான இசுறு தேவப்பிரிய பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் […]
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. […]





