“மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும்.” – இவ்வாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நல்லாட்சிக்குப் பெரும் சவாலை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் […]
Tag: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
மைத்திரியின் ஆட்சியில் இனவெறியர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது – பெரியசாமி பிரதீபன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தைவிட தற்போது முன்னூதரணமாக செயற்படுவதாக கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராபட்ச ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர […]
மஹிந்த அணியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக சு.க. ஒழுக்காற்று நடவடிக்கை! – மத்திய குழு ஒப்புதல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பொது எதிரணியான மஹிந்த அணியின் 5 உறுப்பினர்கள் சு.கவின் கொள்கைகளுக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடூவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. தேசிய அரசு அமையப்பெற்றதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் பொது எதிரணியாகச் செயற்பட்டுவரும் 52 உறுப்பினர்களும் இன்னமும் சு.கவின் உறுப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். அண்மைக்காலமாக இதில் […]
விஜயதாசவிற்கு வலை வீசும் மஹிந்த அணி!
நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டதாலேயெ நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச சதித் திட்டத்தின் […]
கூட்டு அரசைத் தொடர்வதே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்கமுடியாது. ஆகவே, கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.” – இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. […]
மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் அமைச்சுப் பதவிகளுடன் ஐ.தே.கவில் இணையத் தயாராம்!
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசில் இருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்தால் மஹிந்த அணியைச் சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். அது தொடர்பில் இரகசியப் பேச்சு நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாந்த பண்டார சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் […]
அரசிலிருந்து எவரும் வெளியேறமாட்டர்! – டிசம்பரில் சு.கவின் முடிவை அறிவிப்போம் என்கிறார் துமிந்த
“வீடு என்றால் ஆயிரம் சண்டை இருக்கும். சாதாரண சண்டைக்காக உடனே எவரும் வெளியேறமாட்டார்கள். டிசம்பர் மாத இறுதியில் தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து இருக்குமா? இல்லையா? என்று அறிவிப்போம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் விலகவுள்ளனர் […]
சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது” என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் […]
தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்கு ஆபத்து! – இப்படிக் கூறுகின்றது சு.க.
“ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அத்துடன், அது ஸ்திரமற்ற அரசியல் நிலைமையையே தோற்றுவிக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. இவ்விடயம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேசிய அரசமைக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு […]
டிசம்பர்வரை பொறுத்திருக்கமுடியாது! – சு.க. அதிருப்திக் குழுவினர் தெரிவிப்பு
டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. தேசிய அரசிலிருந்து வெளியேறுமாறு சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழுவைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும், வரவு – செலவுத் திட்டத் தொடருடன் முடிவெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தார். இந்நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது […]





