சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
Tag: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
வெற்றிப் பாதையில் மைத்திரி அணி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சு.கவின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்” என்று அவர் […]
மைத்திரி – மகிந்த இணைவார்களா ? பிரிவார்களா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.
தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை
தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் இதுகுறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் […]
பிரதமருக்கு எதிரான தீர்மானம் : சு.கவில் பொதுவான இணக்கப்பாடு இல்லை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புpரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று அல்லது நாளை பொது […]
’20’ ஐ திருத்தங்களுடன் மாகாண சபைகளில் களமிறக்கியது அரசு! – அடுத்த வாரம் விசேட அமர்வு
திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் விவாதித்து – தீர்மானமொன்றை எடுப்பதற்காக அடுத்த வாரம் சகல மாகாண சபைகளும் விசேட அமர்வை நடத்தவுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை தேசிய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்து, […]
சு.கவின் அதிருப்திக்குழு மைத்திரியுடன் பேச்சு! – பட்ஜட் கூட்டத்தொடரின்போது ‘பல்டி’க்கு தயாராக உத்தேசம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நடைபெற்றுள்ள நிலையில் அதிருப்தி நிலையில் இருக்கும் சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசிலிருந்து வெளியேறும் தமது முடிவை அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வெளியிடவுள்ளனர் என்றும், அதன் பிறகு கூட்டரசிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்றும் அறியமுடிகின்றது. தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என மைத்திரியுடன் உள்ள 17 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக […]
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை […]
இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த
இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித்தாவல்கள் செப்டம்பரில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.





