Tag: திஸ்ஸ அத்தநாயக்க

ஐ.தே.கவின் 71ஆவது மாநாட்டில் திஸ்ஸவுக்கு கதவுகள் திறபடுமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராகிய தான் அக்கட்சியின் ஊடாகவே மீள் அரசியல் பிரவேசத்தை விரும்புகிறார் என்றும், தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 36 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார். […]

ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை […]

தாய்வீட்டுக்குள் நுழையத் தயாராகின்றார் திஸ்ஸ!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது […]

திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வரும் தனது புதல்வியை பார்க்க செல்ல அனுமதி வழங்குமாறு […]