நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற […]
Tag: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், ஆளுந்தரப்பு சார்பில் கலந்துகொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரினார். அதற்கு பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்ட சபாநாயகர், […]
கூட்டமைப்பின் இறுதி முடிவு!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார். அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, […]
அனைத்து அமைச்சர்களுக்கும் மைத்திரி விடுத்துள்ள அதிரடி உத்தரவு
அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, “அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் […]
வெகு விரைவில் தென்னிலங்கையை பதற வைக்க உள்ள செய்தி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகளின்போது முக்கிய சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அவை வெகு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளையடுத்து […]
மைத்திரிக்கு செக் வைக்கும் கரு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால […]
மகிந்தவின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்?
இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் அறிவிப்பு வரையப்பட்டு, அதில் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட போது, அதிபர் செயலகத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும், இருந்துள்ளார். இந்தச் திட்டத்துக்கு […]
கூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி!
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி நாளை கோருவார் […]
ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் […]
மாபெரும் கூட்டணியுடன் களமிறங்கும் – பிரதமர் மகிந்த
சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சிறிலங்கா […]





