ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர். ஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர். […]





