Tag: எரிபொருள்

வாகன விபத்தில் 25 பேர் காயம்

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று எரிபொருள் ஏற்றிவந்த வாகனத்தின் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசு தெரிவித்தது. இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்ததாவது, வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சட்டத்தை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் படித்துப்பார்த்து செயற்படவேண்டும். வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்பில், அரசு அத்தியாவசிய சேவையாக எரிபொருள் விநியோககத்தை […]