யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளுமாறு கோரியும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கலைப்பீட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் …
Read More »தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ?
தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன ? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி வேண்டி வவுனியாவில் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் சளைக்காமல் தொடர்கின்றது. நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியில் இறங்கிக் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். “ஜ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் துரோகம் இழைக்காதே!”, “கடத்தியவர்களைக் காப்பாற்றவா காலநீடிப்பு?”, “தெருவில் இருக்கும் தாய்மார்களின் கண்ணீருக்குப் பதில் என்ன?” போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு …
Read More »