வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார். அது தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டை மீளப்பெற்று சமாதானமாக செல்வதற்கு இணங்குமாறு தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கோரிய போதும், சத்தியசீலன் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவர் மீது மீண்டும் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *