இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்­சத்து 60 ஆயி­ரத்து 867பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். 13 ஆயிரத்து 420  மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.