வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 டெங்கு நோயாளர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் மற்றும் சுகாதார திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ். லவன் கடந்த பெப்ரவரி மாதம் 90 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகமாக உள்ளமையே வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்ததுடன் இதுவரை நாடு பூராகவும் 24 ஆயிரம் டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *