பட்டதாரிகளின் பிரச்சனை : ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க விக்னேஸ்வரன் தீர்மானம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 29 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக இரவு, பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்றுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *