ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் சிறிலங்கா மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்இ எதிர்காலத்தில் சிறிலங்கா மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களைக் குறைக்க முடியும் என்று நம்புவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.