அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தெற்கு  மக்களின் ஆதரவுடனே ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொண்டோம் என்பதை   வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.  இருப்பினும் ஜனாதிபதி  அனைத்து இன மக்களின்  தலைவராகவே  செயற்படுகிறார் எமது ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள் புறக்கணிப்பப்படுவதில்லை. அவர்களையும் இணைத்துக் கொண்டே அரசியல்  ரீதியில் பயணிப்போம்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை   வெற்றிக் கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி   ஜனாதிபதி தேர்தலில் முன்னெடுத்த தேர்தல் பிரசாரத்தை தற்போது அக்கட்சியின் இரு தரப்பினரும் முன்னெடுக்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு  மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.