பிலிப்பைன்ஸ் இராணுவ தளபதி கொரோனாவால் பாதிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் கடந்த 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். தற்போது, அவருக்கு கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை.
அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபோல், அவரை சந்தித்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி, பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரன்சானா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
-
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
-
இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது
-
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
-
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!