பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் மன்மோகன்சிங் அப்போது தெரிவித்தார்.
பின்னர் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மகிழ்ச்சி தரும் வகையில் இந்திய பொருளாதார நிலைமை இல்லையெனக் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், முதலீடுகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரும் விளக்கத்தில் மக்கள் திருப்தி அடையவில்லை எனக் கூறிய ப.சிதம்பரம், உண்மை நிலை தெரியாமல் அதீத நம்பிக்கையில் பாஜக அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.