Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை டிக்கோயா தரவளை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆரதனையில் பங்குகொண்டவர்கள் கடந்த 29ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தேவாலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதிவரை இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டனர்.

யாழப்;பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆராதனையில் மேற்படி போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டனர்.

என்றாலும் இவர்கள் டிக்கோயாவில் நடத்தியுள்ள ஆராதனையில்;; கலந்துகொண்டுள்ள 65 குடும்பங்களைச் சேர்ந்தவர்ளும் நேற்றுமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் இருந்து வருகைதந்த 135 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv