Friday , November 15 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம்

விமானப்படையினர் வசமுள்ள கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி வடமாகாண சபையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பதனால் அவற்றை அடிப்படையாக கொண்டு காணிகளை விடுவிக்குமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு மக்கள் கடந்த 14 ஆவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …