கனடாவில் யாழ்ப்பாணத்து தமிழர் அடித்துக் கொலை
கனடாவில் நேற்றுமுன்தினம் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் தமிழர் என ரொரன்றோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 மணியளவில் மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த கொலைச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வருகிறது.
அந்தப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இரண்டு ஆண்களுக்கு இடையில் ஆரம்பித்த வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கமலகண்ணன் உயிரிழந்தார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை ரொரன்றோ பொலிஸார் தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!
-
ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
-
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
-
தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம்
-
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
-
தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?
-
குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு
-
வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு