கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்த நோயாளி 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்திருப்பதால் புதிய அச்சம் தொற்றியுள்ளது.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த 36 வயதான லி லியாங் என்பவர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வுஹானின் ஹன்யாங் மாவட்டத்தில் உள்ள குபோ தற்காலிக மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைக்கு பின் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு எதிர்மறைவான முடிவு கிடைத்தது.
தொடர்ந்து மூன்று நாட்களாக அவருடைய உடல் வெப்பநிலையும் சாதாரணமாக இருந்ததால் பிப்ரவரி 12 ஆம் திகதி அன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
குணமடைந்த நோயாளிகள் அனைவரும் கண்காணிக்கப்படுவதற்கான வைக்கப்படும் தனியார் ஹோட்டலில் இருந்த போது, திடீரென லியாங்கிற்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 2ம் திகதி வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது இறப்பு சான்றிதழானது அவருடைய மனைவி மெய்யிடம் வழங்கப்பட்டது. அதில் இறப்பிற்கான காரணமாக கொரோனா நோய் தாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மருத்துவமனைகளில் இருந்து நோயாளில் வெளியேற்றப்படுத்தற்கான நாட்களை மருத்துவர்கள் அதிகப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய