மஹத் எலிமினேட் ஆனார், வெளியே செல்லும் முன்பு பாலாஜி தூக்கி போட்ட குண்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மஹத் பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இன்று விஜய் தொலைக்காட்சியே தன் புது ப்ரோமோவில் மஹத் எலிமினேட் ஆகி செல்வது போல் காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் மஹத் செல்லும் போது பாலாஜி சென்று ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்று சொல்ல அட இதென்னடா புதுக்கதை என எல்லோரும் ஷாக் ஆனார்கள்.

மேலும், அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மஹத்தை விட்டு பிரிய முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார், இன்று வெளியே வரும் மஹத் என்ன பேசுவார் என்று பார்ப்போம்.