எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
விடை தெரியா கேள்விகள் – கவிதை
பல்நூல்கள் ஆய்ந்ததும்
சால்புடையோர் செவியுற்றும்
சிலபல கேள்விகள் நிற்கின்றன
விடையற்று அனாதைகளாய்…
தத்துவங்களும் அனுபவங்களும்
தத்தளிக்கின்றன
விடைக்கு வித்தின்றி…
கடைநிலை பாமரனுக்கு மட்டுமல்ல
கடைத்தேறிய மேதாவிகளுக்குள்ளும்
கடை விரிக்கின்றன…
விடைதெரியா கேள்விகள்…
விடைதெரியா கேள்விகளுக்கு
விடை தராமலே
விடை பெறுமோ
நம்மிடம் வாழ்க்கை…




