நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்ந்து நீடித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களை அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், அங்கு உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு …
Read More »தாழமுக்கம் சூறாவளியாக உருவாகும் சாத்தியம்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு,சப்ரகமுவ, மத்திய,மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 தொடக்கம் …
Read More »8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களே அவதானம் !
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள்மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More »கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்
நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய தென் மாகாணப் பகுதிகளிலும் பதுளையிலும் சற்று முன் வீச ஆரம்பித்திருக்கும் கடும் காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் …
Read More »விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருத …
Read More »பதினைந்து பேர் தேசிய வைத்தியசாலைகளில்!
நிலவும் அசாதாரண காலநிலையால், பதினைந்து பேர் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
Read More »தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!
தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் …
Read More »பாடசாலைகளுக்கு விடுமுறை: பரீட்சைகள் பிற்போடப்பட்டன
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதேவேளை இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
Read More »அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை
அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் …
Read More »சுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..!
தேவையான பொருட்கள்: மட்டன் – ½ கிலோ கொத்தமல்லி – 25 கிராம் புதினா – 25 கிராம் கறிவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – 5 சீரகம் – 1 தேக்கரண்டி பூண்டு – 2 தேக்கரண்டி இஞ்சி – 2 தேக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி கசகசா விழுது – 1 தேக்கரண்டி தயிர் …
Read More »