வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது. அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு மேலே நிலை கொண்டுள்ள ஓகி புயலின் தாக்கத்தால் லட்சத்தீவுகளில் பலத்த …
Read More »எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தி துறை பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்களும் நாகை, காரைக்கால் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததுடன் தடை செய்யப்பட்ட வலையுடன் மீன் பிடித்ததாக இலங்க கடற்படை குற்றம் சாட்டி, மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும், காரைநகர் …
Read More »இந்திய – இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை
இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார். கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதமாக அவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய கடற்படையின் …
Read More »இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு
தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »2018 இல் மனிதாபிமான உதவிகளுக்கு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை
2018 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவிகளுக்கு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. உலகில் மிகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள 91 மில்லியன் மக்களுக்கு உதவ இந்த நிதி அவசியமாகும். குறித்த நிதியானது கடந்த ஆண்டு கோரப்பட்ட நிதியை விட ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. …
Read More »வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது
நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் …
Read More »திருமதி செல்லம்மா அப்பாசாமி
ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி செல்லம்மா அப்பாசாமி (29.11.2017) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர் களான கந்தையா சின்னத் தங்கம் தம்பதியரின் ஏகபுதல்வி யும் காலஞ்சென்ற அப்பா சாமியின் அன்புமனைவியும் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் நாகேஸ்வரன், ஞானேஸ்வரன் (துர்க்கா மோட்டோர்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் பூரனேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மாமியும் சுதர்சன் – சுகன்யா, வாஹினி – வேல்மகிபன், அர்சிகா – நிமல் …
Read More »சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் பலி : 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 52 பேர் காயமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பாதுகாப்பான …
Read More »பிரதேச செயலகங்கள் அனைத்தும் நாளை திறக்கப்படும்
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளைய தினம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததுடன், அதற்குத் தேவையான நிதி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே துறைமுகங்கள் மற்றும் கப்பற் …
Read More »அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். ”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், …
Read More »