சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்றுக்கொண்டால் அனைத்து இந்து கோவில்களையும் இடித்துவிட்டு பெளத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் திருமாவளவன் தலையை …
Read More »தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்
சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிறன்று தாயுடன் …
Read More »சட்டவிரோதமாக கள் விற்ற ஒன்பது பேருக்குத் தண்டம்
சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மற்றும் அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த ஒன்பது பேருக்கு நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. மதுவரித் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட குறித்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்போதே நீதிவான் நளினி சுபாகரனால் 13 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் விதிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் …
Read More »மகிந்தவைப் பாதுகாப்பதில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!
மகிந்தவைப் பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவரது பாதுகாப்புக்கு எந்தக் குந்தகம் ஏற்படவும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன வின் கோரிக்கைகுப் பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார். ‘‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பரப்புரைக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கெடுப்பார். அவருடைய பாதுகாப்புக்கு …
Read More »புலிக்கொடி அரசியல்!
புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழர்களிடமாக இருந்தால் …
Read More »இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியுள்ள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது. இன்று காலையில் அந்தச் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த முரண்பாடு காரணமாக, ரெலோ அமைப்பு தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதன் …
Read More »கணபதிப்பிள்ளை ஜெயநாதன் (நாதன்)
கொக்காவில் வீதி, துணுக்காயைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப் பிள்ளை ஜெயநாதன் (நாதன்) நேற்று (07.12.2017) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு கணபதிப் பிள்ளை மற்றும் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காந்திமதியின் (மதி) அன்புக் கணவரும் நிவேதன் (மாணவன் – மு / மல்லாவி மத்திய கல்லூரி), வினோஜா (மாணவி – மல்லாவி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாக்கியநாதன் காலஞ்சென்ற அருணகிரிநாதன் (குகன்) மற்றும் …
Read More »போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி
இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்துநின்றவர்கள் போராளிகள்தான். நாம்உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள், விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும்விதமாக ஆயுததாரிகள் என விளித்துநிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது. ஒவ்வொருதேர்தல்காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற …
Read More »கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!
முல்லைத்தீவு பெருங்கடலுக்கு நள்ளிரவில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Read More »கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் : சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை சமரசமாக தீர்க்கமுடியும்.
Read More »