சமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் வீடியோவில் நெட்டிசன்கள் சில சிக் ஜாக் வேலைகள் செய்து மீம்ஸ்களா இணையத்தில் உலவ விட்டுள்ளனர். மறைந்த முதவ்லர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்டது என ஒரு வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது எனவும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைப்பழியை நீக்கவே இந்த …
Read More »அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு
தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர். ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். இவர்கள் குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். பரீட்சை இடம்பெறும் காலத்தில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் …
Read More »தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்கள் மீட்பு
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி யில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அவை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. அவற்றில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வீரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய காணொளிகள் காணப்படுகின்றன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே, …
Read More »ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் …
Read More »டெல்லியில் கடும் பனி மூட்டம்
டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் கடும் குளிரும் காணப்படுகிறது. காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 28 ரயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலையில் குறைந்த தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் …
Read More »ஸ்ரீ பைரவரின் அருளாசியை பெறுவதற்கான வழிபாடு!
ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இதனை பின்பற்றி பாருங்கள். தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள். இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது …
Read More »தோழிக்காக தனது உயிரை விட்ட பிளஸ்-1 மாணவி
விழுப்புரம் அருகே உடன் படித்த தோழி இறந்ததால் கவலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரசாந்தி(16). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருநாவலூரை அடுத்த ஆவலம் கிராமத்தை சேந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரசிகா(16). இவரும் பிரசாந்தி படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் …
Read More »பாலியல் பலாத்காரன் செய்தவனுக்கு 3 வருடம் மட்டுமே தண்டனையா?
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த அறிவழகன் என்ற குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2800 மட்டுமே அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சென்னை கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக …
Read More »அக்கட பூமியிலும் அசத்தும் அமலா பால்
விவாகரத்து பெற்றபிறகு, நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். இயக்குநர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றபிறகு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ‘ஆயுஷ்மான் பவ’ என்ற …
Read More »2ஜி தீர்ப்பு குமாரசாமி தீர்ப்பை போன்றது : எச்.ராஜா
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது இந்த தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டு நீதி வெல்லும் என …
Read More »