மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் …
Read More »நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன?
இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் காப்பகங்கள் அமைத்து தர வேண்டும் என்று வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து விவாதிக்கும் போது, முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத …
Read More »பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் காத்திருக்கிறேன்
10 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பு நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். பட தயாரிப்பு மற்றும் அரசியலில் களமிறங்கிய பின் குஷ்பு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள அஞ்ஞாதவாசி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு …
Read More »மருத்துவமனைக்கு அருகில் சிசு மீட்பு
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Read More »மயில்வாகனபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன
மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் அனுமதியின்றித் தறிக்கப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகன புரம் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவதினம் அங்கு சென்ற பொலிஸார் தறிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றினர். சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை நீதிமன்றில் பாரப்படுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்தார் ஹரி ஆனந்த சங்கரி
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் உ.ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் காணாமல்போனோர்கள் நடத்திவரும் போராட்ட கொட்டகைக்கு நேற்றுக் காலை சென்ற அவர் அங்கு காணமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ‘முந்நூறு நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற் போனவர்களின் விடயத்தில் இங்குள்ள அரசியல்தலைவர்களையோ அரச …
Read More »யாழ்ப்பாணத்தை மீட்டது நான் தான்!
கிளிநொச்சியையும், முல்லைத்தீவையுமே மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டது. யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். ஈவெயாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போரை வென்றதாகக் கூறுகின்றார்கள். போரின் மூன்றில் இரண்டு பங்கை யார் முடித்தது. யார் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியது? எனது அரசு ஆட்சியை பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து …
Read More »எடப்பாடியை விளாசிய தினகரன்
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய …
Read More »எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சட்டம் தளர்வடைந்ததால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற …
Read More »தற்கொலைக்கு அனுமதி வேண்டும்
மும்பையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். தெற்கு மும்பையில் வசித்து வரும் நாரயணன் லவாடே(88) மற்றும் அவரது மனைவி ஐராவதி(78) தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ …
Read More »