Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 34)

பார்த்தீபன்

நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! – மேலும் 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது எனவும், மேலும் 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து காணி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளித்தார். பின்னர், …

Read More »

போருக்கு பின்னர் முகாம்களில் தஞ்சமடைந்த தமிழ் மக்களின் தங்கத்துக்கு என்ன நடந்தது? – தகவல் எதுவும் இல்லை என்கிறது அரசு

கேப்பாபுலவு காணிகளுக்கு

போரின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுதந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துகள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் தம்மிடம் எந்தவொரு தகவலும் இல்லை என்று அரசு தெரிவித்தது. நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இந்நிலையில், நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று நான்காவது தடவையாகவும் இது தொடர்பில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கான …

Read More »

பதவிக்காக அலையும் அமைச்சர் நானல்லன்! – எந்தவொரு பதவியையும் இதுவரை கேட்டு வாங்கியதில்லை என்கிறார் கயந்த

அதிகாரத்தை கைப்பற்றுவதே – அமைச்சர் கயந்த

ஊடகத்துறை அமைச்சு மற்றும் கலை,கலாசார அமைச்சின்கீழ்வரும் சில திணைக்களங்களைத் தனது அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்தார் என வெளியாகியுள்ள தகவல்களை காணி, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக நிராகரித்தார். “பதவிக்காக அழையும் நபர் நான் அல்லன். இதுவரை எந்தப் பதவியையும் கேட்டுவாங்கியதில்லை” என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் …

Read More »

பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக்குற்றத்தையும் ரவியின் மீது சுமத்த முடியாது என்கிறது மஹிந்த அணி!

நீதிபதி நியமிப்பு-ஜீ.எல். பீரிஸ்

இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கான முழுக் குற்றத்தையும் முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் மீது சுமத்தமுடியாதென மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பொறுப்புகளை சரிவர நிர்வகிக்கவில்லை என்பது தெரிந்த விடயமே என்றபோதிலும் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அவரே அடிப்படைக் காரணம் என்று கூறமுடியாது. அரசின் பலவீனமான பொருளாதாரக் …

Read More »

ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று! – தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்; பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில்

ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள். தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று. இறுதிக்கட்டப் …

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் ஓரணியாக நாளை சுடரேற்றுவோம்! – சம்பந்தன் அழைப்பு

“தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று, அரச படைகளால் முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும்.” – இவ்வாறு கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஈழத்தில் அரச படைகளால் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட மிகப்பெரும் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது. …

Read More »

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி

“சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இங்கு தமிழ்மொழியும் அரச கரும மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு எடுத்துரைத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன். பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய …

Read More »

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! – இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர்

“இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும்.” – இவ்வாறு தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் கடுந்தொனியில் எடுத்துரைத்தார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனை சந்தித்துப் …

Read More »

இனப்படுகொலையின் சாட்சியாக இன்றும் பல தடயங்கள் முள்ளிவாய்க்காலில்!

அரச படைகளின் இனவெறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் தடயங்களை இப்போதும் காணமுடிகின்றது. விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதியை வந்தடைந்தனர். மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிய நிலப் பரப்புக்குள் அடக்கப்பட்டவேளை இராணுவம் ஏவிய எறிகணைகளால் தினமும் வகைதொகையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. …

Read More »

யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் எனவும், வழக்கை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முற்பகல் 11.30 …

Read More »