Thursday , February 6 2025
Home / அருள் (page 277)

அருள்

பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த

மகிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.  

Read More »

வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

இன்றைய ராசிபலன் – 4.11.2017

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அரவணைத்துபோங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். மிதுனம்: …

Read More »

மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி

நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி …

Read More »

புலனாய்வாளர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கொன்ஸ்டபிள் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் …

Read More »

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை …

Read More »

கார் பதிவு மோசடி – தவறான செய்தி; அமலாபால் அறிக்கை

நடிகை அமலாபால் கார் பதிவில் மோசடி செய்ததாக வெளியான செய்தி தவறு என கூறி அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை அமலாபால் கார் பதிவில் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து அதுகுறுத்து விசாரிக்க பாண்டிச்சேரி ஆளுனர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்நிலையில் அமலாபால் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி மலபார் பகுதியின் …

Read More »

தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? – ரமணன் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “சென்னையில் ஏறக்குறைய 12 மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது …

Read More »

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று பிரதமர் மோடி

புதுடெல்லியில் உலக உணவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. உலக வங்கி தொழில் வர்த்தகத்துக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்ட …

Read More »