Wednesday , August 27 2025
Home / அருள் (page 228)

அருள்

பொலிஸ் உத்தியோகஸ்தரின் மரணத்தில் மர்மம்

சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் வீரகெட்டிய இளைஞர் படையணி அலுவலகத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ஹெட்டியாராச்சிகே பிரேமதாச என்ற 53 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் பின்னர் வீடு திரும்பவில்லை என …

Read More »

முக்கிய அறிவித்தலை வெளியிடவுள்ள கோத்தபாய

Gotabaya Rajapaksa

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை தனது நிலைப்பாட்டை சூசகமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெறும் ‘சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள்’ அமைப்பின் வருடாந்த மாநாட்டில் இது இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது. இந்த மாநாட்டில் மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் …

Read More »

மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன்

ஜனாதிபதி

“பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், …

Read More »

இன்றைய ராசிபலன் 14.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை …

Read More »

குழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் – தமிழிசை

வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. …

Read More »

இன்றைய ராசிபலன் 13.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம்: இன்று பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் …

Read More »

நினைவேந்தலின் போது முதன்மைச் சுடரை நான் ஏற்றவேமாட்டேன்!

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும். நான் ஏற்றவே மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கு மாகாண சபை ஒருங்கிணைக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்கப்பட்ட அல்லது உறவுகளைப் பறிகொடுத்த தரப்புக்களில் …

Read More »

இன்டர்போல் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கம்

யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது. கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தப் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய தேவைக்காக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டது என குறித்த கேள்வி எழுப்பியுள்ளது. எமில்காந்தன் மற்றும் இன்னுமொரு புலி உறுப்பினரின் பெயர் மட்டுமே …

Read More »

இன்றைய ராசிபலன் 12.05.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.   மேலும் ராசிபலனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Read More »

வடக்கு மாணவர்களுக்கு யாழ் இராணுவ அதிகாரி விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று …

Read More »