பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக இருப்பவர் மஹத். ஆரம்பத்தில் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசி வந்த அவர் இப்போது பல குழப்பத்தில் இருக்கிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழுதார். இன்று வெளியான புதிய புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும் உட்கார வைத்து மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும், விளையாட்டை விளையாட்டாக செய்யாமல் சொந்த வெறுப்புகளை காட்ட கூடாது என்பது போல் பேசுகிறார். அவர் கூறும் …
Read More »A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர …
Read More »பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி
தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்துகொண்டிருக்கையில் , விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின் இறக்கை தீ பிடித்துள்ளது. …
Read More »யாழ்பாணம் திட்டமிட்டு சிதைக்கபடுகிறதா? தொடரும் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்
வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் சென்ற வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 8.30 மணி அளவில், மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான …
Read More »வவுனியாவில் கடையை உடைத்து பணம் திருட்டு
வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள சில்லறை கடையை இரவு இனம்தெரியாத நபர்களால் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தன நிலையத்தை மூடிவிட்டு இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »இன்றைய ராசிபலன் 20.07.2018
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். மிதுனம்: …
Read More »22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்
யாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளனர். குறித்த அன்னதான மடத்திற்கான உரிமையாளர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று மாலை ஆவிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை …
Read More »எடப்பாடியை மிரட்டும் மத்திய அரசு : பின்னணி என்ன?
முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் …
Read More »உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெலிகட காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு கொழும்பு நீதவானால் வழங்கப்பட்ட ஒரு வருட சிறைதண்டனையை, உடநடியாக அமுல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டுள்ளது. சட்டதரணி ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குறித்த கொழும்பு நீதவானால் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து குறித்த காவற்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »யாழ் வேலணை மக்களுக்கு அவசர வேண்டுகோள்
வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலணை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. சாட்டி பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்த கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கபட படுவதால், உவர் நீர் …
Read More »