யாழ். சாவகச்சேரி பகுதியில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …
Read More »இன்றைய ராசிபலன் 05.08.2018
மேஷம்: மாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். திட்டமிட்டு செயல்படு வதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை …
Read More »ஐஸ்வர்யாவை தண்டிக்கனும் கமல் சார் , சென்ட்ராயன் ஆதங்கம்
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வரை ரொமான்ஸ் படலம் அரங்கேறியதாக சொல்லப்பட்டு வந்தது. இதில் மஹத், யாஷிகா ஜோடி ஒரு பக்கம். அதே வேளையில் ஐஸ்வர்யா, ஷாரிக் மறுபக்கம். பொன்னம்பலம் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என நான் சொல்லட்டுமா என கமலிடம் கேட்க விசயம் பெரிதானது. இது மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விசயத்தில் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ், ஷாரிக் ஐஸ்வர்யா இடையே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என …
Read More »ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என கோரிக்கை
சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில் ரத்து செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைட்டம் மாணவர்களின் நடவடிக்கை குழு அண்மையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கூறுகையில், சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைக்கும் தீர்மானம் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு உடனடியான தீர்வை எதிர்ப்பார்க்கின்றோம். சைட்டம் மாணவர் ஒருவரிடம் வருடாந்த …
Read More »இன்றைய ராசிபலன் 04.08.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக …
Read More »யாழில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்! கிறீஸ் பூதமா என சந்தேகம்
யாழ். அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று நள்ளிரவு தீ மூட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்கு கற்கள் எறியப்படுவதுடன், வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் தட்டப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் …
Read More »திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- ஆனால் அங்கே ஒரு டுவிஸ்ட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கில் தொடங்கிவிட்டது. விஸ்வரூபம் 2 படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து எல்லா மொழிகளிலும் பேட்டிகள் கொடுத்து வருகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல்கள் பாடப்பட்டது. தற்போது தெலுங்கில் படத்தை புரொமோட் செய்ய கமல்ஹாசன் அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் …
Read More »பெற்றோருக்கு எச்சரிக்கை – இரண்டு வயது சிறுமி பரிதாபமாக மரணம்
கம்பளையில் இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகல்ல, கூறுகல கிராமத்தை சேர்ந்த ரசிகா ரஷ்மி வீரசேன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி இரவு உணவுக்காக காட்டுப் பன்றி உட்கொண்டமையினால் சிறுமி சுகயீனமடைந்துள்ளார். பின்னர் நேற்று காலை சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது சிறுமியின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி அந்தப் பகுதி மக்கள் …
Read More »முல்லைத்தீவில் சிறுவன் நரபலி? பெரும் அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு – தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் புதையல் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும், பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடையங்களையும் …
Read More »