பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர்.
ஆனால், அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை பேட்ட வசூலே அதிகம், ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையிலும் விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது.
தற்போது 4 வார முடிவில் பேட்ட ரூ 15.41 கோடியும், விஸ்வாசம் ரூ 12.96 கோடியும் சென்னையில் வசூல் செய்துள்ளது.